பொருட்களின் விலை குறைப்பு!

புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளின் மொத்த விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஒரு கிலோ 130 ரூபா என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் புதிய... Read more »

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த யாழ் பாடசாலை மாணவன்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொஸ்கோ ஆரம்ப பாடசாலை மாணவன் யலீபன் யதூசிகன் 191 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். பொஸ்கோவில் 216 மாணவர்கள் தரம் 5 பரீட்சையில் தோற்றியதில் 154 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை தாண்டியுள்ளனர். இதேபோன்று யாழ்.இந்து... Read more »
Ad Widget

அரபு நாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கான செய்தி!

அரபு லீக்கிற்கு சொந்தமான 9 நாடுகளை உள்ளடக்கிய அரபு கவுன்சிலின் நான்கு உறுப்பினர்களுக்கும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந்நாட்டில் அரபு கவுன்சிலின் தலைவர் பாலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம். எச். தார்... Read more »

வெலிக்கடை சிறைச்சாலையில் சக கைதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உடபடுத்திய கைதி!

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி பட்டப்பகலில் மற்றொரு கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட கைதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி, ஊழல் குற்றச்சாட்டில் 6 வருட... Read more »

தனது தங்கையின் வாழ்க்கையை சிதைத்த அண்ணன்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் 14 வயதுடைய சிறுமிக்கு தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து இளைஞர்களால் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் அச் சிறுமி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரால் மீட்கப்பட்டு... Read more »

பேருந்து சாரதி மேற்கொண்ட தாக்குதலில் நடத்துநர் உயிரிழப்பு!

பேருந்து சாரதி மேற்கொண்ட தாக்குதலில் நடத்துநர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்த 37 வயது குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம், பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீர்கொழும்பு... Read more »

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள தகவல்!

எரிபொருள் விற்பனையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட இலாப,நட்டம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் படி, 95 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றர் ஒன்றின் மூலம் 108.43 ரூபா இலாபத்தை கூட்டுத்தாபனம் ஈட்டியுள்ளதுடன், 92... Read more »

யாழில் மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்து பொது மக்களை அடித்து துன்புறுத்தும் நபர்

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத்துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர். மீட்டர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சி... Read more »

வெளிநாடொன்றில் துன்புறுத்தலுக்கு உள்ளான இலங்கை பெண்கள் நாட்டை வந்தடைந்தனர்!

வெளிநாட்டில் பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் நோய் நிலைகளுக்கு உள்ளான 47 பணிப்பெண்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் காலை (25-01-2023) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். மஸ்கட் நகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.230 என்ற விமானத்தில்... Read more »

இலங்கை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி விலகினார்

இலங்கை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிலிருந்து விலகுவதாக பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P.S.M Charles) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) கடிதம் அனுப்பியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல்... Read more »