இலங்கை அணியின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக ஆர். ஸ்ரீதர் நியமனம்..!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக இந்திய தேசிய அணியின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர். ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஐ.சி.சி. ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் நிறைவடையும் வரையில் இவரது பதவிக்காலம் செல்லுபடியாகும் என இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் களத்தடுப்புத் தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றிய ஸ்ரீதர், தற்போது இலங்கை அணியுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

