பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொலை குற்றச்சாட்டில் நேற்று (16.12.2025) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட சிலர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் நேற்று முன்தினம்(15.12.2025) பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த தாக்குதலில் 4 பற்கள் உடைக்கப்பட்ட நபர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வரும் இந்த நிலையில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மற்றுமொரு நபர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட விசாரரணைகளில் தாக்குதலின் பின்னர் உயிரிழந்துள்ளமை தெரியவந்ததையடுத்து சர்வஜன அதிகாரம் கட்சியின் லங்காபுர பிரதேச சபை உறுப்பினர் மீண்டும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினரின் மனைவி உள்ளிட்ட மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

