மூன்று மாகாணங்களில் 640 பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்பட மாட்டாது – செயலாளர்..!
ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மொத்தம் 640 பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவே அறிவித்துள்ளார்.
தித்வா புயலால் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை (16) தீவு முழுவதும் திறக்கப்படவுள்ளன.
இதன்படி பாடசாலைகளை மீள திறப்பதற்கு தேவையான ஆயத்தங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சினால் இன்று (15) அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசார்பற்ற பணியாளர்கள் ஆகியோரை இணைத்தது.
மூன்று மாகாணங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 640 பாடசாலைகள் நாளை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாது என செயலாளர் நாலக்க களுவே குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பாடசாலை சீருடைகள், அத்துடன் கல்வி மற்றும் கல்விசார் அல்லாத ஊழியர்களுக்கான தளர்வான கொள்கை ஒன்றை நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

