‘3 சந்தேகநபர்களை விடுவித்த வழக்கில் சட்டமா அதிபர் மீது தவறில்லை’

சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக அவரைப் பாதுகாக்கத் தயங்கமாட்டோம் என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் சட்டமா அதிபர் குறித்து வெளியிடப்படும் தவறான மற்றும் ஏமாற்று கருத்துக்கள் குறித்து தனது சங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக, அந்த சங்கத்தின் பதில் செயலாளர் டஷ்யா கஜநாயக்க அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார்.

ஒரு வழக்கில் மூன்று சந்தேகநபர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபர் சமீபத்தில் வழங்கிய பரிந்துரைகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மரபுக்கு இணங்க செய்யப்பட்டுள்ளதாக சட்ட அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

முறையான சட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட பிறகு, சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளதுடன், அந்த முடிவில் சங்கம் தனது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் உயர் மரபுகளுக்கு இணங்க சுயாதீனமான செயற்பட்டுள்ளதால், சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்கும் எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்போம் என்று சட்ட அதிகாரிகள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டுகிறது.

Recommended For You

About the Author: admin