தந்தையுடன் மரண வீட்டிற்கு சென்ற சிறுவன் மாயம்

அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றையதினம் சிறுவன் காணாமல்போயுள்ளதாக தந்தையார் இன்று (27) முறைப்பாடு செய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர். தாய் – தந்தை விவாகரத்து வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த... Read more »

மட்டக்களப்பு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

கஞ்சாவினை சூட்சுமமாக பதுக்கி விற்பனை செய்து வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் சங்கபுரம் கிராமத்தில் வைத்து சந்தேக நபரான 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதானவராவார். இக் கைது நடவடிக்கையானது இன்று மாலை... Read more »
Ad Widget

வீதி கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதலால் மூவர் வைத்தியசாலையில் அனுமதி

வீதி கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த மூவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வீதியில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக... Read more »

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவர் செயலாளர் தெரிவு

சுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் கல்முனை மாவட்ட நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இவ் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது நடப்பு வருடத்திற்கான... Read more »

மட்டக்களப்பு கொம்மாதுறை தீவுப் பகுதியில் நீண்ட நாளாக உயிருக்கு போராடும் யானை

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை – தீவுப் பகுதியில் காட்டு யானை ஒன்று, கால் ஒன்றில் ஏற்பட்ட காயம் காரணமாக நடக்க முடியாமல் கீழே விழுந்து சுமார் 10 நாட்களாக உயிருக்கு போராடி வருகிறது. கொம்மாதுறை தீவுப்பகுதியினுள் வீழ்ந்து கிடந்த நிலையில்... Read more »

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்க கோரி மட்டக்களப்பில் போராட்டம் முன்னெடுப்பு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் என்ற தொனிப்பொருளிலான மக்கள் போராட்டம் இன்று 18ஆம் திகதி சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கம் மற்றும்... Read more »

நேற்றைய தினம் ரெயின்போ பாலர் பாடசாலையின் 11ம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டுநடைபெற்ற கலை நிகழ்வுகள்

ரெயின்போ பாலர் பாடசாலையின் 11ம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியும் விடுகை விழாவும் சாய்ந்தமருது கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. நிகழ்வின் முதலில் பிரதம அதிதிகள் மாலை இடப்பட்டு வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். குறித்த நிகழ்விற்கு பிரதம... Read more »

மட்டக்களப்பில் சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட மூவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 ஆம் வெட்டை கங்காணியார் குளத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட 4 பேர் படகு கவிழ்ந்ததினால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். களுவுந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் மாணவர்களான... Read more »

அக்கரைப்பற்று பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

அக்கரைப்பற்று பகுதியில் பழக்கடையொன்றில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாளை வழங்கி பழம் வாங்க முயற்சித்த அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்கரைப்பற்று – கல்முனை வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள பழக்கடைக்கு சென்று 5... Read more »

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையால் இலவச மூக்கு கண்ணாடி வழங்கி வைப்பு

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையினால் பொது மக்களுக்கான இலவச கண் பரிசோதனையும், மூக்குக் கண்ணாடி வழங்கல் நிகழ்வும் சபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. பிரதேச சபையின் தவிசாளர் க.கமலநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சபை செயலாளர் ச.நவநீதன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்துல்லா... Read more »