இரண்டு வருடங்களுக்கு தேர்தல் நடாத்தப்பட மாட்டாது-ஜனாதிபதி!

தேர்தலை நடத்துமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்துரைக்கையில் இரண்டு வருடங்களுக்கு எந்தத் தேர்தலையும் நடத்த முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “எதிரணியில் உள்ள ஒரு சில கட்சிகள் கூறுவது போல் தேசிய... Read more »

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய குறித்து மனித உரிமை ஆணைக்குழு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் நாடு திரும்புவதற்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து வெடித்த மக்கள் போராட்டத்தால் முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். அதேவேளை... Read more »
Ad Widget

இலங்கையில் இரண்டு நாட்களில் 10 இலட்சம் லீற்றர் மண்ணெண்ணெய் உற்பத்தி

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 10 இலட்சம் லீற்றர் மண்ணெண்ணெய் உற்பத்தி செய்துள்ளது. குறித்த தொகை மண்ணெண்ணெய் நாடு முழுவதும் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மண்ணெண்ணெய் உற்பத்தி தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக நாட்டில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு... Read more »

நாட்டில் கோதுமை மா தட்டுப்பாடு!

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பேக்கரிப் பொருட்களின் விலையேற்றம் பேக்கரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்... Read more »

நடைபெற இருந்த நேர்முக பரீட்சை ஒத்திவைப்பு!

திருகோணமலை மாவட்டத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் பட்டதாரி பயிலுநர்களாகவும் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்காக நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சை நடைபெறவிருந்தது. இந்நிலையில் இன்றும் நாளையும்(24) நடைபெறவிருந்த இந்த நேர்முகப் பரீட்சை தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது. இத்தகவலை கிழக்கு மாகாண பொது... Read more »

நாட்டிற்கு வர இருக்கும் மற்றுமோர் கப்பல்!

ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் காலங்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இந்த விடயத்தினைத் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினை இன்னும் 40... Read more »

காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் மரணம்!

கேகாலையை சேர்ந்த டி.பி.என்.டி. பெரேரா ( 23) எனும் கடற்படை சிப்பாய் இன்று (23) உயிரிழந்துள்ளார். இவர் காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்... Read more »

பண வீக்கம் அதிகரிப்பு!

நாட்டில் ஜூலை மாதத்தில் பணவீக்கம் 66.7% ஆக அதிகரித்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நேற்று இது தொடர்பான தரவுகளை வெளியிட்டது. ஜூன் மாதத்தில் பணவீக்க வீதம் 58.9% ஆக இருந்தது. போக்குவரத்துப் பிரிவில் பணவீக்கம் போக்குவரத்துப் பிரிவில் அதிக பணவீக்க... Read more »

அரசின் தலையீட்டுடன் வெதுப்பக உணவுகளின் விலையை குறைக்க இயலும்!

அரசாங்கம் தலையீடு செய்யுமாயின் பாண் ஒன்றுக்கான விலையை 50 ரூபாவாலும், பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்துள்ளார். காரணம்... Read more »

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்ப்படும் வாய்ப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வாரந்தோறும் எரிபொருள் விநியோகம் குறைக்கப்படுவதால் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறான வரிசைகள் உருவாக்கப்படுவதாக சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.ஓ.சி. தொழிற்சங்கத்தின் இணைச் செயலாளர்... Read more »