கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை நிறைவு செய்ய இலங்கைக்கு பிரான்ஸ் உதவி

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் மற்றும் வெளியுறவு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அவரது குழுவினர் நாட்டை வந்தடைந்தனர்.

“இலங்கை மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்து சமுத்திரத்தின் திறந்த, விரிவான மற்றும் சபீட்சமான இந்து – பசுபிக் பிராந்தியத்தின் பொதுவான இலக்குகளை பகிர்ந்து கொள்ளும் இரண்டு நாடுகளாகும். கொழும்பில் அதனை மீண்டும் உறுதிப்படுத்த முடிந்துள்ளது.

எங்கள் 75 வருடகால இராஜதந்திர உறவுகள் எங்களின் ஒருமைப்பாட்டிற்கான வலுவான இணக்கப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளது.” என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Upon completion of his productive visit to SL, French President Emmanuel Macron tweeted, “Sri Lanka & France are two nations in the Indian Ocean sharing the same goal: an open, inclusive and prosperous Indo-Pacific. In Colombo we confirmed it: strong as in our 75 years of diplomatic relations, we would open a new era to our partnership.”

இலங்கையில் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கும் துரிதப்படுத்தவும், அனைத்துப் பங்காளிகளையும் வலியுறுத்தும் அதேநேரம், பெரிஸ் சமவாயச் செயலகம் மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் ஆதரவளிக்கும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் இலங்கைக்கான தனது விஜயத்தின் போது தெரிவித்தார்.

During his historical visit to SL, French President Emmanuel Macron expressed his strong support to complete the debt restructuring process from both the Paris Club Secretariat as well as the French Government to encourage all other partners to support & expedite the completion of Sri Lanka’s debt restructuring strategy

Recommended For You

About the Author: S.R.KARAN