தலைமன்னார் – இராமேஸ்வரம் , நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையேயான படகுச் சேவை இந்தியா- இலங்கை கடல் வழிப்போக்குவரத்தை மேலும் பலப்படுத்தும் – ரணில்

தலைமன்னார் – இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையேயான படகுச் சேவைகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிப் போக்குவரத்தை மேலும் பலப்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஏனைய தொடர்புகளையும் ஆராய்வது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க... Read more »

ஜனாதிபதி ரணில் – அஜித் தோவல் டெல்லியில் சந்திப்பு

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று காலை டெல்லியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் Read more »
Ad Widget

வலுசக்தி மையமாக திருகோணமலை; மோடி – ரணில் உறுதி

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர். இலங்கைக்கு வலுசக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு... Read more »

பெறுமதி வாய்ந்த பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

தென்னிலங்கையில் மிகவும் பெறுமதியான அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தியுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை தெவிநுவர பிரதேசத்தில் வைத்து 08 கிலோ அம்பருடன் சந்தேகநபர்கள் குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய... Read more »

மீண்டும் நாட்டில் வரிசைகள் ஏற்ப்படும் அபாயம்!

நாடு மீண்டும் செப்டெம்பர் மாதத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாணய... Read more »

மொனராகலையில் நிலநடுக்கம்

இலங்கையில் மொனராகலை பிரதேசத்தில் சிறு அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் கூறியுள்ளது. நிலநடுக்கம் பதிவான நேரம் இன்று காலை 09 மணி 06 நிமிடத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 2.6... Read more »

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியின் மரணத்தில் தொடரும் மர்மம்

பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த யுவதிக்கு சர்சைக்குரிய செஃப்டர் எக்ஸோன் மருந்தே வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 11ஆம் திகதி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட... Read more »

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2023, நவம்பர் 27 ஆம் திகதி... Read more »

கிழக்கு பல்கலைக்கழகத்தில் உயர்பீடாதிபதிக்கான தேர்வு இன்று

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உயர்பட்டப்படிப்புகள் பீடத்திற்கான பீடாதிபதி நேர்முகத்தேர்வு இன்று நடைபெறவுள்ள நிலையில் குறித்த பதவிக்கு தகுதியல்லாத பேராசிரியர் ஒருவர் அப்பதவியை தமக்குப் பெற்றுத் தர ஆவண செய்யுமாறு மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளாராம். மேலும் இது குறித்து தெரிய வருவதாவது,... Read more »

யாழில் சிறிய தந்தையால் தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்த சிறுமி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் நீண்ட நாட்களாக சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பலாலி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் நேற்றையதினம் (20.07.2023) வியாழக்கிழமை கைது செய்யபட்டுள்ளார். இதேவேளை, சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்... Read more »